தமிழக அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் காலியாக உள்ள 135 சமையலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் காலியாக உள்ள 135 சமையலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 215

பணி: சமையலர் - 135

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: தூய்மைப் பணியாளர் - 80

சம்பளம்: தூய்மைப் பணியாளர் (முழு நேரம்) 13 காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,700 - 24,200, மற்ற பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.3000 தொகுப்பூதியத்திலும் வழங்கப்படும்.

தகுதி: விண்ணப்பத்தாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்கள் அறிய https://tiruchirappalli.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.10.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com