ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளி

News image
Updated On :23 டிசம்பர் 2020, 10:12 am


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 3223/TPR/ Estt/2020-21

நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd

மொத்த காலியிடங்கள்: 13 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி:  Technician (Lab) - 01
பணி:  Technician (Electrical) - 01
பணி:  Technician (Refrigeration) - 01
பணி:  Technician (Operation) - 01
பணி:  Technician (Boiler) - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும்,  பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ,19,500-62,000

பணி:  Light vehicle Driver - 03
பணி:  Heavy vehicle Driver - 05

வயது வரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும் மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

சம்பளம்: மாதம் ரூ,19,500-62,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:  ரூ.250. கட்டணத்தை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ (TDCMPU), Tirupur என்ற பெயருக்கு வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யுப்படும் முறை:  கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com.என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam road,Tirupur - 641 605”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2021

மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Tech%20&%20Drivers%20-%20TPR%20Application%20Form-19.12.2020%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.