பொறியியல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
coalindia_0309chn_1
coalindia_0309chn_1


பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.03/2021

பணி: Management Trainee

காலியிடங்கள்: 588

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மைனிங்க் - 253
2. எலக்ட்ரிக்கல் - 117
3. மெக்கானிக்கல் - 134
4. சிவில் - 57
5. தொழிலகப் பொறியியல் - 15 
6. ஜியாலஜி  - 12 

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

வயதுவரம்பு: 04.08.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஏதாவதொன்றில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அப்ளைடு ஜியோ பிசிக்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும். மருத்துவ பரிசோதனை தேர்வும் நடத்தப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி : 09.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com