வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் வேலை 

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் வேலை 


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  347 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Manager (Risk) - 60 
பணி: Manager (Risk) - 60 
பணி: Manager (Civil Engineer) - 07 
பணி: Manager (Architect) - 07 
பணி: Manager (Electrical Engineer) - 02 
பணி:Manager (Printing Technologist) - 01 
பணி: Manager (Forex) - 50 
பணி: Manager (Chartered Accountant) - 14 
பணி: Assistant Manager (Technical Officer) - 26 
பணி: Assistant Manager (Forex) - 120 

தகுதி: எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎஃப்ஏ, எம்எஃப்சி, எஃப்ஆர்எம், பிஜிடிபிஎம், பிஜிபிஎம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: மேலாளர் பணிக்கு 21 முதல் 35 வயதிற்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 21 முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.unionbankofindia.co.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ 850 செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com