ரயில்வேயில் கிளார்க் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

ரயில்வேயில் கிளார்க் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
Published on


வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். SQ 2021-22 தேதி: 26,11,2021

பணி: Clerk cum-Typist (Sports Quota) 

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ. 5,200 -20,200

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விளையாட்டு தகுதி: அறிவிப்புகள் வெளியிட்டுள்ள விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்குபெற்று குறைந்தபட்சம் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.04.2019 பின்னர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கிடப்பட்டும். தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcpry.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com