ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விண்ணப்பித்துவிட்டீர்களா...? இன்றே கடைசி... பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவ தொழிற்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரியும் விரும்பும் திருமணமாகாத இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :3 மார்ச் 2021, 1:50 am

தினமணி


இந்திய ராணுவ தொழிற்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரியும் விரும்பும் திருமணமாகாத இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: 10, +2 Technical Entry Scheme course-45

காலியிடங்கள்: 90

வயதுவரம்பு: 16 1/2 வயது முதல் 19 1/2 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது முதல்நிலை, இரண்டாம் விலை என இரு கட்டங்களாக நடைபெறும்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது 5 நாள்கள் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: Allahabad(UP), Bhopal (MP), Bengalur(karnataka), Kapurthala(Punjab)

நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பயிற்சி: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் ஒரு ஆண்டு ராணுவப் பயிற்சியும்,  4 ஆண்டு ராணுவ தொழிற்நுட்ப பயிற்சியும் வழங்கப்படும். ஐந்து ஆண்டு பயிற்சிக்கு பின் Lieutenant -ஆக பணியமர்த்தப்படுவர்.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜூலை 2021

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.