வங்கிகளில் வேலை: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Assistant Professors ,Faculty Research Associates , Research Associates, IT Engineers (Data Centre) என பல பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை
வங்கிகளில் வேலை: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
Published on
Updated on
1 min read

பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Assistant Professors ,Faculty Research Associates , Research Associates, IT Engineers (Data Centre) என பல பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இன்று முதல்( அக்.1) ஆன்லைனில் விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

பணி: Assistant Professor - 01
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,66,541.00
வயதுவரம்பு: 32 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Faculty Research Associate - 01
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 98,651.00
வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Associate - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 74,203.00
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Hindi Officer - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 74,203.00
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: IT Engineer (Data Centre)  - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 59,478.00
வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: IT Database Administrator - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 59,478.00
வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Software Developer and Tester (Frontend, Backend) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 59,478.00
வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி, புள்ளியியல், ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலை, உளவியல், தொழில்துறை உளவியல், நிறுவன உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 21 முதல் 35 வயத்துக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் இணைக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Advertisement_Various_Posts_OCT_2021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com