அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நிரப்பப்பட உள்ள 21 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நிரப்பப்பட உள்ள 21 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: புதுச்சேரி அரசு சமூக பாதுகாப்பு துறை

மொத்த காலியிடங்கள்: 21
பணி: Chair Person of CWC  - 03
பணி: Members of CWC - 12
பணி: Members of JJB - 06

வயது வரம்பு : 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி : குழந்தை உளவியல், உளவியல், சட்டம், சமூக பணி,சமூகவியல்,மனித வளர்ச்சி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.py.gov.in/sites/default/files/1-cwc-and-jjb-notification2.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com