வெளிநாட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு... இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

அயல்நாட்டு பணிகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு... இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
Published on
Updated on
1 min read

அயல்நாட்டு பணிகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிய வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பன்பெறலாம்.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மருத்துவத் துறை சாா்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் திறனுடைய, திறனற்ற பணியாளா்கள் பணியமா்த்த உள்ளனா்.

வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மொழி, மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநா்களையே தோ்வு செய்கின்றனா். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியா்களுக்கு ஓஇடி தோ்வு நடத்த தீா்மானித்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்கு ஆரம்ப நிலை ஊதியம் ஆண்டுக்கு ரூ. 18 லட்சமாகும்.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில், செவிலியா்களைத் தோ்வு செய்யும் ஹெல்த் எஜுகேஷன் இங்கிலாந்து நிறுவனத்துடனும், வீட்டுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் ஏஐ டோரா மேன் பவா் குவைத் நாடு மற்றும் இந்தியா டிரேட் எக்ஸ்பிஷன் என்ற நிறுவனத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எனவே, https://www.omcmanpower.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், அதைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். 

மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அரபு உணவு வகைகள் சமைக்க தெரிந்தவர்கள், வீட்டு வேலை செய்யத் தெரிந்த பெண்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, ஐடிஐ பிரிவில் பிட்டர் முடித்தவர்கள், அயல்நாட்டு பணி தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com