
கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநருக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலத்தில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) 2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஓராண்டு தொழிற் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.
விண்ணப்பங்களை www.boat.srp.com இணையவழி மூலமாக அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.