மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்:விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்:விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 21 கிளார்க், ஓட்டுநர், சிடிஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 21 கிளார்க், ஓட்டுநர், சிடிஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 

மொத்த காலியிடங்கள் : 21 

நிர்வாகம் : மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

பணி: Lower Division Clerk (LDC) - 10 
பணி: CTI (Civilian Technical) - 02 
பணி: Steno Grade -II - 01 
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Civilian Motor Driver - 08 
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி : 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.19,900 - 81,100

விண்ணப்பிக்கும் முறை : https://indianarmy.nic.in/home  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Presiding Officer, Civilian Direct Recruitment (Secrutiny of Application) Board, Headquarters 1 Signal Traning Centre, Jabalpur (MP) - 482001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2021 

மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Desktop/EMP%20NOTICE1STC.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com