தினமும் ரூ.1000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உளஅளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக  பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக  பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு  தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழக கிராமப்புற மக்களின் பங்கேற்போடு சமூக, பொருளாதாரத்தில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவது ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை. இந்த துறையின் மூலம் கிராமத்தின் அடிப்படை வசிதிகளையும், தரமான சேவைகளையும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இத்துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: குறைகேள் அதிகாரி(Ombudsman)

சம்பளம்: நாள்தோறும் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 68 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் இந்த பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவ பெற்றிருக்க வேண்டும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Direct of Rural Devolpment and panjat raj, Saidapet, Panagal building, Chennai-600015
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்கள் அறிய www.tn.gov.in அல்லது www.tnrd.gov.in அல்லது https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com