சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerks பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

அறிக்கை எண்.43/2019

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம் 

பணி : Law Clerks 

மொத்த காலிப் பணியிடங்கள் : 37 

தகுதி : 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படித்து சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.hcmadras.tn.nic.in   என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்த சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: mhclawclerkrec@gmail.com

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras - 600 104. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.hcmadras.tn.nic.in  அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com