வேலை... வேலை... வேலை... சமூக பாதுகாப்பு துறையில் வேலை
By | Published On : 11th December 2021 10:00 AM | Last Updated : 11th December 2021 10:00 AM | அ+அ அ- |

தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழக சமூக பாதுகாப்புத் துறை
பணி: Social Worker Member
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35, அதிகபட்சம் 65க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1வது தெரு, திருகோகர்ணம் – அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம் - 622 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2021
மேலும் விவரங்கள் அறிய www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.