கோப்புப்படம்
கோப்புப்படம்

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
Published on

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல் 2019-ஆம் ஆண்டுகளில் (01.01.2014 முதல் 31.12.2019 வரை) பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

எனவே, இந்த அரசாணை வெளியீட்டு நாளான டிச.2 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது மாா்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதள முகவரியைப் பயன்படுத்தி, பதிவுதாரா்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் ஆட்சியா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com