விண்ணப்பித்துவிட்டீர்களா...? விமானப்படையில் ஏர்மேன் வேலை

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா...? விமானப்படையில் ஏர்மேன் வேலை


இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Indian Air Force

பணி:  Group ‘X’ (Except Education Instructor trade)
தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Group ‘Y’ [Except IAF(S) and Musician Trades]
தகுதி:  ஏதாவதொரு பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு தொழிற்கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: Group ‘Y’ Medical Assistant Trade Only.
தகுதி:  இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

பணி: Airmen (Group ''X''/ Group ''Y'')
தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

உடற்தகுதி: உயரம் 152.5 செ.மீட்டர்,  5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும் குறைந்தபட்சம் 55 கிலோ உடல் எடை பெற்றிருக்க வேண்டும். 

உடற்திறன் தகுதி: 6.5 நிமிடத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 10 Push-ups, 10 sit-ups, 20 squats எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: விமானப்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_18_2021b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com