குரூப் ஏ பணி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

குரூப் ஏ பணி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் மும்பையில செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப் 'ஏ' பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் மும்பையில செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப் 'ஏ' பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientific Officer (Group-A) Scientific Officer Post

சம்பளம்: மாதம் ரூ.56,100

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல, வேதியியல், பயோ சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியோகெமிஸ்ட்ரி, புட் டெக்னாலஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE-2020 அல்லது GATE-2021 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். GATE தேர்வு எழுதாதவர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செப்டம்பர் 2021-இல் நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்படவர்களுக்கு முதலில் Trainee Scientific Officer ஆக பணியமர்த்தப்படுவர். தேவையான பயிற்சிக்கு பின்னர் Scientific Officer ஆக நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.barconlineexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com