பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... என்எம்டிசி நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் என்எம்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... என்எம்டிசி நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read


இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் என்எம்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 03/2020

பயிற்சியின் பெயர்: Executive Trainee

பிரிவு: Electrical
காலியிடங்கள்: 10

பிரிவு: Materials Management
காலியிடங்கள்: 25

பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 14

பிரிவு: Mining
காலியிடங்கள்: 18

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வு பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் ஒட்டி சுய சான்றொப்பம் செய்த அனைத்து நகல்களுடன் GATE-2021 அட்மிட் அட்டையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Post Box No:1382
Post Office, Humayun Nagar, Huderabad, Telangana State - 500 028

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2021

மேலும் விவரங்கள் அறிய www.nmdc.co.in அல்லது https://jobapply.in/nmdc2021gate/Adv_Eng.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com