ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்! 

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 03 ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 03 ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழக வனத்துறை (TN Forest)
பணி : Junior Research Fellowship - 03 
சம்பளம்: மாதம் ரூ. 25,000 - ரூ.30,000 வரை வழங்கப்படும்.
தகுதி : ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
Junior Research Fellowship - Research பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை : aiwcrte@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுவிவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :  05.12.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.aiwc.res.in/assets/images/Announcement%20(Revised).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பணி: Internship Programme 
காலியிடங்கள் : 08
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.30,000 வரை வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை : aiwcrte@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2021 
 
மேலும் விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெற https://www.aiwc.res.in/assets/images/AIWC_Internship_Programme_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com