ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான ஆணையத்தில் வேலை
By | Published On : 01st September 2021 03:01 PM | Last Updated : 01st September 2021 03:50 PM | அ+அ அ- |

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 6 ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம்
காலியிடங்கள்: 06
பணி : Consultant
பணி : Junior Consultant
வயது வரம்பு : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.50,000 - ரூ.75,000 வரை வழங்கப்படும்.
தகுதி : இந்திய விமான ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 5 -10 ஆண்டுகள் வரை பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : recttceller@aai.aero எனும் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2021
மேலும் விவரங்கள் அறிய www.aai.aero அல்லது
1.https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Bilaspur%20advertisement.pdf
2. https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka&Bokaro%20advertisement.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.