ரயில்வேயில் வேலை வேண்டுமா? - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 13 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வேயில் வேலை வேண்டுமா? - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 13 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : மத்திய ரயில்வே மண்டலம் (Central Railway) 

மொத்த காலியிடங்கள் : 13 

பணி: MEDICAL PIiACTIONERS (DOCTORS) 

சம்பளம்: ரூ.75,000 வழங்கப்படும்.

தகுதி: மருத்தவத்துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் மருத்துவத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்று 65 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள pgazbb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வானது Whatsapp Video Call மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022 

மேலும் விபரங்கள் அறிய https://cr.indianrailways.gov.in அல்லது https://cr.indianrailways.gov.in/uploads/files/1623135997893-combinepdf%20(1).pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com