எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர்(மார்க்கெட்டிங்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CRPD/SCO/2021-22/20
பணி: Assistant Mnager(Marketing & Communication)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
தகுதி: எம்பிஏ(மார்க்கெட்டிங்), பிஜிடிஎம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவித்திறன் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2021 தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.i/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2022