'செபி' நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'செபி' நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
Published on
Updated on
1 min read

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Securities and Exchange Board of India

மொத்த காலியிடங்கள்: 120

பணி: Assistant Manager (Officer Grade A)
1.General Stream - 80 
2. Legal Stream - 16 
3. Information Technology Stream - 14
4. Research Stream - 07 
5. Official Language Stream - 03

வயது வரம்பு:  31.12.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமான ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=199 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.