தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.21) கடைசி நாளாகும்.
விளம்பர எண். 601 அறிக்கை எண். 20/2021
பணி: Assistant Director of Fisheries
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: M.F.Sc., அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியலில் பிரிவில் முனைவர் பட்டம் அல்லது உயிர் தொழில்நுட்பம் எம்.எஸ்சி., அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியலில் பிரிவில் முதுநிலை பட்டம் மற்றும் இதற்கு ஆதாரமாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டு ஆராய்ச்சி அனுபவம் அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்திய ரிசர்வ் வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/20_2021_AD_FISHERIES_ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.