இந்திய ரிசர்வ் வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கி காலியாக உள்ள சட்ட அதிகாரி, மேலாளர், நூலக வல்லுநர்கள் மற்றும் கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?



இந்திய ரிசர்வ் வங்கி காலியாக உள்ள சட்ட அதிகாரி, மேலாளர், நூலக வல்லுநர்கள் மற்றும் கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி. தனியாரால் தொடங்கப்பட்ட இந்த வங்கி 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலமாகவும் இருந்து வருகிறது. 

நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கி வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். 

இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், பணம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இந்த வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் செயல்பட்டு வருகிறார். 

தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள சட்ட அதிகாரி, மேலாளர், நூலக வல்லுநர்கள் மற்றும் கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.    1A / 2021-22

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

மொத்த காலியிடங்கள்: 14 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Legal Officer
சம்பளம்: மாதம் ரூ.55,200

பணி: Manager
சம்பளம்: மாதம் ரூ.55,200

பணி: Library Professionals  
சம்பளம்: மாதம் ரூ.44,500

பணி: Curator
சம்பளம்: மாதம் ரூ.44,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், கலை, அறிவியல், நூலக அறிவியல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், வரலாறு, பொருளாதாரம், நுண்கலை, தொல்லியல், இசையியல், நாணயவியல் ஆகியவற்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.20202 தேதியின்படி, 21 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கியின் ஊழியர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம், கட்டணம் செலுத்துவதற்கு https://ibpsonline.ibps.in/rbidec21/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4077 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com