பொறியியல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Junior Engineer (Civil) / Section Officer (Civil)
காலியிடங்கள்: 575
பணி: Junior Engineer (Electrical) / Section Officer (Electrical)
காலியிடங்கள்: 116
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 151
பணி: Assistant Engineer (Electrical)
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு நிலையிலான எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022

மேலும் https://dsssb.delhi.gov.in அல்லது https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/ADVT_NOTICE_JE_CIVIL_801-22-Combined_Exam.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

இதற்கு விண்ணப்பிக்கலாம் |

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.