ரயில்வேயில் வேலை வேண்டுமா..? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
கர்நாடகம் மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். SWR/P-HQ/Sports(OA)2021-22
பணி: Clerk Cum-Typist(Sports Quota)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.07.2022 தேயின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொன்றில் சர்வதேச, ஆசிய, தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொரு போட்டியில் பங்குபெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தையாவது பெற்றிருக்க வேண்டும். 14.01.2019க்கு பின்னர் கால கட்டத்தில் பெற்ற சாதனைகள் மட்டுமே கணக்கிடப்படும். தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டோடு தொடர்பில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2022
மேலும் விவரங்கள் அறிய www.rrchubli.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.