விண்ணப்பித்துவிட்டீர்களா..? - தமிழக சுகாதாரத்துறையில் வேலை

தமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட மாற்றுத்திறனாளிகளுக்கான செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழக சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட மாற்றுத்திறனாளிகளுக்கான செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: செவிலியர்

காலியிடங்கள்: 86

தகுதி : செவிலியர் பிரிவில் டிப்ளமோ நர்சிங் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, பொது பிரிவினர் 18 முதல் 44க்குள்ளும், மற்ற பிரிவினர் 18 முதல் 59-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : http://mrbonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 350. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2022

மேலும் விவரங்கள் அறிய http://mrbonline.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com