விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 ஆப்ரேட்டர் டிரெய்னி கெமிக்கல், ஜூனியர் பையர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01032022
பணி: Operator Trainee (Chemical)
காலியிடங்கள்: 133
தகுதி: வேதியியல் பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Fireman Grade II (A3)
காலியிடங்கள்: 04
தகுதி: மத்திய, மாநில ஆங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் 6 மாத முழுநேர பையர்மேன் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்சி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://rcftd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2022
மேலும விவரங்கள் அறிய https://rcfltd.com/files/Detailed_Advt%20-%20Optr%20n%20Fire%2012_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.