விண்ணப்பித்துவிட்டீர்களா..? -அணு ஆற்றல் துறையில் டெக்னிக்கல் அலுவலர் வேலை
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு ஆற்றல் துறையில் உள்ள டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.NFC/02/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer 'D' (Software Developer) - 02
பணி: Technical Officer 'D' (IT Infrastructure and Cyber Security) - 01
பணி: Technical Officer 'D' (IT Infrastructure) - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700
தகுதி: பொறியியல் துறையில் சிஎஸ்இ, இசிஇ, ஐடி, இஐஇ, இஇஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி தொடர்புடைய பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் 'PAY & ACCOUNTS OFFICER-CER, NFC' என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer, Recruitment-I, Nuclear Fuel Complex, ECIL Post, Hyderabad - 500 062.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.04.2022
Related Article
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்டெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
கடற்படையில் கொட்டிக்கிடக்கும் 2500 வேலைவாய்ப்புகள்: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மருத்துவ பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.