நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்  நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்  நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


மத்திய அரசு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் இந்திய பட்டதாரிக இளைஞர்களிடம் இருந்து ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 08/22. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Executive (Combined Cycle Power Plant - O&M) 
காலியிடங்கள்: 50
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேன் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive (Operations-Power Trading) 
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Executive (Business Development-Power Trading) 
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 90,00 வழங்கப்படும் + இதர சலுகைககள். 

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in  அல்லது www.ntpc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனிலும் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/advt%2008_22_detailed%20advt%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com