ராணுவப் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திரூப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவப் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read


திரூப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: PGT Chemistry - 01
பணி: TGT - Chemistry - 01
பணி: TGT - Hindi - 01
பணி: Office Superintendent - 01
பணி: General Employees(MTS) - 03
பணி: Band Master - 01
பணி:  Art Master - 01
பணி: PEM.PTI-Cum-Matron(Female) - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 21 முதல் 50க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500. எஸ், எஸ்டி பிரிவினர் ரூ.100. இதனை THe Principal, Sainik School, Amaravathinagar என்ற பெயருக்கு எஸ்பிஐ வங்கியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sainikschoolamaravathinagar.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Principal, Sainik SChool, Amaravathi Nagar, Udumalaipet Taluk, Tirupur District(Tamilnadu), Pin - 642 102

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2022

மேலும் விவரங்கள் அறிய www.sainikschoolamaravathinagar.edu.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com