தமிழ்நாடு தபால் துறையில் 4,310 காலியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு தபால் துறை வட்டாரத்தில் கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தபால் துறையில் 4,310 காலியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு தபால் துறை வட்டாரத்தில் கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதாவது கிராமின் டாக் சேவக் பணியின்கீழ் மூன்று வகையான பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலியிடங்கள்: 4,310

பணி: Branch Post Masters(BPM)
சம்பளம்: மாதம் ரூ.12,000  
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுமக்களுக்கு அஞ்சல் துறை சேவைகளை வழங்குவது,  பண பரிவர்த்தனை, ரெக்கார்டுகளை கையாள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பணி: Assistant Branch Post Master (ABPM)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் நிலைய பொருள்களை விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று  தபால்களை புக்கிங்க் செய்வது, பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பணி: Dak Sevak
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் தபால் துறை பணிகளில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போ போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவி செய்ய வேண்டும். 

பிளஸ் 2 வரை கணினி அறிவியலை ஒரு பாடமாக  படித்தவர்கள் தனியாக கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. 

சம்பளம்: மாதம் ரூ.10,000  

வயதுவரம்பு: 05.06.2022 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். சைக்கிள், இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தற்காலிமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை தலைமை தபால் நிலையம் மூலமாக ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி,எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indianpostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com