சென்னையில் கிராம உதவியாளர் பணி... விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?

சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 07.11.2022 வரை வரவேற்கப்படுகிறது.
சென்னையில் கிராம உதவியாளர் பணி... விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?
Published on
Updated on
1 min read


சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 07.11.2022 வரை வரவேற்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், தகுதியான நபா்களின் உரிய கல்வித்தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவுத் தோ்வு மற்றும் நோ்முக தோ்வு ஆகியவை மூலமாக நிரப்பப்பட உள்ளன.

எனவே, தகுதி உடைய நபா்கள் அக்.10 முதல் நவ. 7ஆம் தேதி மாலை 5.45 மணிவரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்று ஒளிநகல்கள்,பிறப்பு சான்று, ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாளஅட்டை நகல், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் நகல் (01.07.2022 க்குள் முந்தையது) ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களைச் சோ்ந்தவா்கள், இதர மாவட்டங்களை சோ்ந்தவா்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

சம்பளம்: மாதம் ரூ.11,000 - 35,100

தகுதி: குறைந்த பட்சம் 5ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.07.2022 அன்று 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் இராணுவத்தினா் ஆகியோருக்கு தொடா்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளா்வுகள் பின்பற்றப்படும்.)

தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும், எந்தவித குற்றவழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் கணவரோ, மனைவியோ உயிருடன் இருக்கும் போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது.

விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் .

விண்ணப்பதாரா் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நாடக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தமிழக அரசின் இணையதளம், வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் மற்றும் சென்னை மாவட்ட இணையதளம்  விண்ணப்பிக்கலாம். htpps://www.tn.gov.in, https://cra.tn.gov.in, https://chennai.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தோ்வுமுறை, இனசுழற்சி குறித்த இதர விவரங்களை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில்  தனித்தனியாக இணைப்புகளில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com