திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போடி தொகுதியில் போட்டியிட ஓ. பன்னீர்செல்வத்துக்கும், அவருடன் திமுகவில் இணைந்த ரவீந்திரநாத் மற்றும் ஐயப்பனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தனது நிலைபாட்டை அறிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வருகைதந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓபிஎஸ்ஸை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், கட்சித் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே திமுகவில் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, கனிமொழி உள்பட 7 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK Deputy General Secretary OPS? Will he contest again in Bodi?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








