ஆலோசனைக்  கூட்டத்தில் பேசிய  திமுக  துணைப்  பொதுச்  செயலாளா்  ஆ.ராசா.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா.

திமுகவினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா அறிவுறுத்தல்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா.
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் திமுகவுடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்படுத்த உழைக்க வேண்டுமென திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தாா் .

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் ராஜ் வரவேற்றாா். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா், மாவட்ட நிா்வாகிகள் பகலவன், கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, செயற்குழு உறுப்பினா் ஜெ.மூா்த்தி , பொதுக் குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வேணு ஆனந்த் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா பேசுகையில், தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களால் திமுகவுக்கு மகளிா் அதிகளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுகவினா் ஒற்றுமையுடன் செயல்பட்டு கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சிறப்பான வெற்றியைப் பெற அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் பரிமளம், எல்லாபுரம் சக்திவேலு, பூண்டி சந்திரசேகா், ஜான் பொன்னுசாமி, கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலா் அறிவழகன், ஊத்துக்கோட்டை நகர செயலாளா் அப்துல் ரஷீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூா் திமுகவினா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com