விண்ணப்பித்துவிட்டீர்களா..? நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், செவிலியர் வேலை
By | Published On : 02nd April 2022 05:50 PM | Last Updated : 02nd April 2022 05:50 PM | அ+அ அ- |

20d-nurse044943
கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆர்ம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த கால அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மருந்தாளுநர்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்து தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: துணை சுகாதார செவிலியர்கள்
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: துணை சுகாதார செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு: நேர்முகத் தேர்வுக்கு வருவோர் கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் கரோனா பணி சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2022 அன்று காலை 10 மணியளவில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.