தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!



தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்பந்த காலை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.  01/2022  தேதி: 05.04.2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Urban Planner /Town Planning Specialist - 2
பணி: Capacity building/Institutional Strengthening Specialist - 02
பணி: MIS Specialist  - 05
பணி: Social Development Specialist - 01
பணி: Information, Education and Communication (IEC) Specialist  - 01

தகுதி: டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000

வயதுவரம்பு: 31.03.2022 தேதியின்படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Executive Engineer, (HFA Cell), Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai, Chennai – 600 005

மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 22.04.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com