மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மசோதாக்கள்?
மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து...
மக்களவை - கோப்புப் படம்
மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் 5 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18-ஆவது மக்களவையின் 8-ஆவது கூட்டத்தொடரானது, ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 21 வரையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பாஜக அரசு 5 மசோதாக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தகவல்களின்படி, வருமான வரி திருத்த மசோதா, உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு திருத்த மசோதா, தேசிய மாண்பில் அவமதிப்புக்கு தடை திருத்த மசோதா, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தவிர்த்து) எண்ணிக்கையை 33-லிருந்து 37-ஆக உயர்த்துவதற்காக உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவை நெறிப்படுத்தவும், தாமதமான பதிவு மீதான விதிகளை மேலும் கடுமையாக்கவும் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேசிய சின்னங்களை அவமதிக்கும் அல்லது தேசிய மாண்பைக் குறைக்கும் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக தேசியமாண்பில் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வணிகத்தை எளிதாக்குவதையும் நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இவற்றுடன் சேர்த்து, மக்களவையில் 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவும், 2025 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதாவும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
மேலும், இந்தப் பட்டியலில் மக்களவையில் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
Summary
Govt lists five Bills for Monsoon Session, no mention of delimitation legislation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






