மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

இந்திய பொருள்கள் மீது 100% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்க எம்.பி.க்கள் தாக்கல்

இந்திய பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் சபையில் சில எம்.பி.க்கள் தாக்கல் செய்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஜூலை 2026, 2:51 am IST

இந்திய பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் சபையில் சில எம்.பி.க்கள் தாக்கல் செய்துள்ளனா்.

மறைந்த குடியரசு கட்சி மேலவை (செனட்) எம்.பி. லின்ட்சே கிரகாம் உள்ளிட்டோரால் ஏற்கெனவே முன்மொழியப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜா்பைஜான் ஆகிய 5 நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு அந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், போரில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை வரி எனும் ஆயுதம் மூலம் அமெரிக்க நாடாளுமன்றம் தண்டிக்கும் முதல் நடவடிக்கையாக அமையும்.

முன்னதாக, இதேபோன்று இன்னொரு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.