பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டங்கள்! ஆளுநர் உரை

5 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்கான 'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் உரை...

TN governor speech in TVK govt first TN assembly session

ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் - TN assembly

Published On :

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு 'வெற்றி தமிழகம்' என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

"53. தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவித்திடவும். மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும். அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வரசு செயல்படுத்தும்.

1 தமிழ் அடையாளம் மற்றும் பெருமை.

2 கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு.

3. மகளிர் நலன்,

4. இளைஞர் நலன்.

5. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் நலன்.

6. உலகத்தரம் வாய்ந்த கல்வி,

7. வளமான தமிழ்நாடு.

8. சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல்,

9. உலகத்தரமான கட்டமைப்பு மற்றும்

10. மக்கள் நல அரசு நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என பத்து தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையாக இது இருக்கும்.

எத்தனை தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தைத் தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும். இந்த அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசின் கடமை. பேரவை உறுப்பினர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

PDF
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு விவரம்...
பார்க்க

Summary

TN governor speech in TVK govt first TN assembly session

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.