தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு சம்மன்: சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை

மதுரையில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை எச்சரிக்கை குறித்து...

News image

சு. வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 11:33 am IST

மதுரையில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை வைகை ஆற்றைச் சீரமைக்கவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும் எனக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்லேகர் ஆய்வு கூட்டத்தையும் நடத்தினார்.

ஆளுநரின் இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள், வன்னி அரசு மற்றும் நிர்மல் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆளுநர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, "நான் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் தலைவராக உள்ளேன். நானும் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஆய்வுகள் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள்தான் ஆய்வுசெய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Summary

Su. Venkatesan MP warns that summons will be issued to officials participating in review meetings conducted by the Governor RV Arlekar in Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.