சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 23

பணி: Assistant Professor(Full Time Temporary Basis)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.Tamil - 01
2. English - 01
3. Economics - 01
4. Political Science & Public Administration - 01
5. Commerce - 01
6. Psychology - 02
7. Computer Science - 01
8. Management Studies - 02
9. Music - 02
10. French - 01
11. Journalism - 02
12. Sanskrit - 01
13. saniva Siddhantha  - 01
14. Geography(B.Sc & M.Sc) - 01
15. Sociology (BA & MA) - 02
16. Chiristian Studies - 01

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2009 ஜூலை 21 ஆம் தேதி முன்னர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET/SETதேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.30,000

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar, University of Madras, Chepauk, Chennai - 600 005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com