வங்கியில் வேலை வேண்டுமா? நபார்டு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற  வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தேசிய விவசாய மற்றும் கிராமப்புற  வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் விவரம்: 170 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Manager in Grade ‘A’ - General - 80
பணி: Assistant Manager in Grade ‘A’ - Agriculture Engineering - 05
பணி: Assistant Manager in Grade ‘A’ - Fisheries - 02
பணி: Assistant Manager in Grade ‘A’ - Forestry - 02
பணி: Assistant Manager in Grade ‘A’ - Land Development/Soil Science - 03
பணி: Assistant Manager in Grade ‘A’ - Plantation/Horticulture - 02
பணி: Assistant Manager in Grade ‘A’ - Civil Engineering - 03
பணி: Assistant Manager in Grade ‘A’ - Environmental Engg/ Science - 04
பணி: Assistant Manager in Grade ‘A’ - Finance - 30
பணி: Assistant Manager in Grade ‘A’ - Computer/Information Technology - 25
பணி: Assistant Manager in Grade ‘A’ - Agri Marketing/Agri Business Management - 02
பணி: Assistant Manager in Grade ‘A’ - Development Management - 03
பணி: Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha) - 07
பணி: Assistant Manager (P&SS) - 02]

தகுதி: வேளாண் பொறியியல், சிவில், மீன்வள அறிவியல், வனவியல், வேளாண்மை, வேளாண்மை (மண் அறிவியல், வேளாண்மை), தோட்டக்கலை, சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், பிபிஏ (நிதி,வங்கி), பிஎம்எஸ் (நிதி,நிதி மற்றும் நிதியியல்), பி.எம்.எஸ்., முதலீட்டு பகுப்பாய்வு, கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை சந்தைப்படுத்தல், விவசாயம் வணிக மேலாண்மை, சமூகப்பணி, மேம்பாடு மேலாண்மை, வளர்ச்சி ஆய்வு போன்ற பிரிவுகளில் 60 சதவீகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 21 முதல் 30, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

சம்பளம்: மாதம் ரூ.28,150 - 55,600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150, மற்ற பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.
Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha) பதவிக்கு விண்ணப்பிப்போர் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: htpps://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com