வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஆர்பிஐ-ல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 950 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஆர்பிஐ-ல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

1935-இல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே இந்திய அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளையும் இயக்கி வருகிறது. 

இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதும் முதல் கொல்கத்தா நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.  பின்னர் நிரந்தரமாக 1937 இல் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் வங்கியின் ஆளுநர் அமர்ந்து கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தொடக்கத்தில் தனியாரால் தொடங்கப்பட்ட இந்த வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டதன் பின்னரே, இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமானது. 

இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு எப்ரல் 1 நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். 

ரிசர்வ் வங்கியைப் பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. 

இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. 

தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் இருந்து வருகிறார். 

இந்நிலையில், ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 950 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணியில் சேர்வதே குறிக்கோளாக கொண்டு படித்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் குறித்து பார்ப்போம்: 

பணி: Assistant

காலியிடங்கள்: 950

சம்பளம்: மாதம் ரூ. 20,700 - 55,700

வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆர்பிஐ ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு தோராயமாக 2022 மார்ச், 26, 27 நாள்களில் நடைபெறலாம். 

தமிழ்நாட்டில் முதல்நிலை எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.rbi.org.in அல்லது https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com