வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 34 மூத்த தனிச் செயலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 34 மூத்த தனிச் செயலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : Senior Private Secretary 

காலியிடங்கள்: 34

தகுதி : மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் தனிச் செயலாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பணிகளில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 56வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.34,800 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://itat.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.03.2022

மேலும் விபரங்கள் அறிய https://itat.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com