விண்ணப்பித்துவிட்டீர்களா..? - அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 75 உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 75 உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 75

பணி: PROFESSOR

1. Cyber space law and justice  - 01
2. Maritime law - 01

பணி: Assistant professor

3. Business law - 05
4. Constitutional law - 05
5. Intellectual property law - 07
6. International law and organisation - 05
7. Environment law and legal order - 06
8. Criminal law and criminal justice administration - 06
9. Labour law - 03
10. Administrative law - 02
11. Human rights and duties education - 04
12. Maritime law - 04 
13. Interdisciplinary Studies
English - 02 
Economics - 02 
Sociology - 01
Political Science - 01
Computer Science - 04

பணி: ASSISTANT DIRECTOR OF PHYSICAL EDUCATION - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு:  57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tndalu.ac.in/recruitment.html என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar, The tamilnadu Dr. Ambedkar law university, Poompozhil, No 5, DGS Dinakaran salai, Chennai - 600028.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1180, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2022

மேலும் விபரங்கள் அறிய, https://www.tndalu.ac.in/recruitment.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com