தமிழக வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
By | Published On : 12th January 2022 03:05 PM | Last Updated : 12th January 2022 03:05 PM | அ+அ அ- |

வருமான வரித்துறை
தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை
மொத்த காலியிடங்கள் : 04
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஆய்வாளர் - 02
பணி: உதவியாளர் - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்
பணி: சுருக்கெழுத்தாளர் கிரேடு.II - 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.35,400
விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய www.incometaxindia.gov.in அல்லது https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/28/Vacancy-Circular-for-various-posts-in-CA-Chennai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ. 1.15 லட்சம் சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?