திருச்சி என்ஐடி-யில் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 12th January 2022 03:59 PM | Last Updated : 12th January 2022 03:59 PM | அ+அ அ- |

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
விளம்பர எண். NITT/R/TF-1/2022
மொத்த காலியிடங்கள்: 22
பணி: Faculty
1. Civil Engineering - 06
2. Computrer Applications - 05
3. Computer Science & Engineering - 04
4. Humanities & Social Science - 01
5. Metallurgical & Materials Engineering - 03
6. Architeclture - 03
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் |
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar, NIT-Trichy, Tamilnadu-620 015.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2022
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவட் சென்று சேர கடைசி தேதி: 19.01.2022
மேலும் விவரங்கள் அறிய
https://recruitment.nitt.edu/tmpfac22/advt/TF-2022-Advertisement%20new%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு