ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தேசிய புலானாய்வு முகமையில் காலியாக உள்ள 67 உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தேசிய புலானாய்வு முகமையில் காலியாக உள்ள 67 உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 67

பணியிடம்: தில்லி, குவஹாத்தி, ஹைதராபாத், மும்பை, லக்னோ, ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, ராய்ப்பூர், ஜம்மு, சண்டிகர், இம்பால், சென்னை, ராஞ்சி, பெங்களூர், போபால், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், பாட்னா, அகமதாபாத்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Sub Inspector - 43
தகுதி:  ஏதாவெதாரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300 வழங்கப்படும். 

பணி: Head Constable - 24
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,700 வழங்கப்படும். 
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:    SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:  07.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://nia.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19133_54_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com